செவ்வாய், 24 ஜூலை, 2018
School Morning Prayer Activities 24.07.2018
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
உரை:
மேகம் கடலிலிருந்து நீரைக்
கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.
பழமொழி :
A pen is mightier than a sword
கத்தி முனையைவிட பேனா முனை வலிமை வாய்ந்தது
*பொன்மொழி:*
அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.
- புத்தர்.
*இரண்டொழுக்க பண்பாடு :*
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.கல்விக் கண் திறந்த வள்ளல்” என்று காமராசரை பாராட்டியது யார்?
பெரியார்
2.வட இந்திய செய்தித்தாள்கள் காமராசரை எப்படி போற்றினர்?
காலா காந்தி
நீதிக்கதை :
ஆமையும் இரண்டு வாத்துகளும்
The Tortoise and the Ducks Story
அது ஒரு அழகிய ஏரி. அந்த ஏரியில் அழகிய ஆமை ஒன்று தனது இரண்டு வாத்து நண்பர்களுடன் வாழ்ந்து வந்தது. தினமும் அந்த இரு வாத்துகளை ஆமை சந்திப்பது வழக்கம்.
ஒருநாள் அந்த இரண்டு வாத்துகளும் வருத்தத்துடன் காணப்பட்டன. இதைக்கண்ட ஆமை, “ஏன் இருவரும் வருத்தத்துடன் உள்ளீர்கள்”, என்று கேட்டது.
“பல வருடங்களாக மழை பெய்யாத காரணத்தால் இந்த ஏறி வறண்டு வருகிறது. இன்னும் சில காலத்திற்கு பிறகு இங்கு முற்றிலும் நீர் வறண்டுவிடும். எனவே நாங்கள் இருவரும் பக்கத்துக்கு ஊரில் உள்ள ஏரிக்குச் செல்ல இருக்கிறோம்”, என்று வாத்துகள் கூறியது.
“என்னை விட்டு செல்வதற்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது. நீர் குறைந்தால் உங்களுக்கு உணவு தான் குறையும், எனக்கோ உயிரே போய்விடும். என்மீது உங்களுக்கு அன்பு இருக்குமானால் என்னையும் அழைத்துச் செல்லுங்கள்”, என்றது ஆமை.
“உனக்கு தான் இறக்கைகள் கிடையாதே! உன்னை அழைத்துப்போக எங்களால் எப்படி முடியும்?” என்றது வாத்து.
அதற்கு ஆமை ஒர் உபாயம் செய்யலாம், “ஒரு நீண்ட குச்சியை எடுத்து வாருங்கள். நான் நடுவில் என்னுடைய பற்களால் கொட்டியாய் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் இருபக்கமும் பிடித்து தூக்கிக் கொண்டு பறந்து செல்லுங்கள்”, என்றது ஆமை
“நாங்கள் உயரப்பறக்கும்போது நீ வாயைத்திறந்தால் கீழே விழுந்து இறந்து விடுவாய்” என்று வாத்துகள் கூறியது.
அப்படியானால் “பறக்கும்போது நான் வாய் போசாமல் இருக்கின்றேன்” என்று ஆமை கூறியது.
இரு வாத்துகளும் இருபக்கமும் குச்சியை பிடித்து பறக்க நடுவில் ஆமை வாயில் பற்றிக்கொண்டு பறந்தன.
சிறிது தூரம் பறந்தவுடன் ஆமை சந்தோஷத்தில் துள்ளிகுதிக்க ஆரம்பித்தது. இரு வாத்துகளும் ஆமையிடம் “சிறிது நேரம் அமைதியாய் இரு. இல்லாவிடில் நீ கீழே விழுந்து விடுவாய்”, என்று கூறியது.
செல்லும் வழியில் வாத்துகள் ஆமையுடன் பறந்து சொல்வதப்பார்த்த மக்கள் வாத்துகள் எதையோ தூக்கிக்கொண்டு கொண்டு போகின்றன என கூச்சலிட்டனர். ஆமையின் கெட்ட நேரம் அந்த வார்த்தைகள் அதன் காதில் விழுந்தது. இந்த மக்கள் ஏன் இப்படி கூச்சலிடுகின்றனர் என வாய்திறந்து பேச அது பிடித்திருந்த பிடி விட்டுவிட கீழே விழத்தொடங்கியது.
கீழே விழுந்த ஆமை உடல் சிதறி இறந்தது.
நீதி: வருமுன் காப்போனும், சமயோசித புத்தியுடையவனும் சுகம் பெறுவார்கள்.
இன்றைய செய்தி துளிகள் :
1.மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பு: கடலில் வீணாகப் போகிறது காவிரி நீர்...குடிநீருக்கும் பயன்படாத அவலம்
2.லாரி ஸ்டிரைக் 4வது நாளாக தொடர்கிறது: மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என எதிர்பார்ப்பு
3.18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டோம் என தினகரன் தரப்பு வாதம்
4.பள்ளிகளில் 'எமிஸ்' பதிவு பணி: வரும் 31க்குள் முடிக்க உத்தரவு
5.சொந்த மண்ணில் சாதித்த இலங்கை...... டெஸ்ட் தொடரில் தென் ஆப்ரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது
🌹🌹🌹🌹🌹🌹🌹
சனி, 21 ஜூலை, 2018
தினமும் வாசிப்பு வகுப்பு நடத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு
தினமும் வாசிப்பு வகுப்பு நடத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு
தமிழகம் முழுவதும் பள்ளிகளில், தினமும் வாசிப்பு வகுப்பு நடத்தப்பட வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, ராமேஸ்வரமுருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:இளம் தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, பள்ளி, மாணவ - மாணவியர் இடையே வாசிப்பை அதிகப்படுத்தும் வகையில், ஜூலை, 15 முதல், ஆகஸ்ட், 14 வரை, ஒரு மாதம் வாசிப்பு மாதமாக கொண்டாடப்படும். இந்த ஒரு மாதத்தில், தினமும் ஒவ்வொரு பள்ளியிலும், வாசிப்பு வகுப்பு என, நேரம் ஒதுக்க வேண்டும். இதற்கான புத்தகங்கள், ஒவ்வொரு பள்ளியின் அருகிலும் உள்ள பொது நுாலகத்தில் இருந்து வழங்கப்படும்.
நற்பண்புகள், நற்சிந்தனை மற்றும் ஒழுக்கத்தை வளர்க்கும் புத்தகங்களை படிக்கும் வகையில், வாசிப்பு நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் போட்டி தேர்வெழுத சி.இ.ஓ.,க்கள் அனுமதி தரலாம்
ஆசிரியர்கள் போட்டி தேர்வெழுத சி.இ.ஓ.,க்கள் அனுமதி தரலாம்
சென்னை, 'அரசு பள்ளி ஆசிரியர்கள், டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு எழுத, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் அனுமதி வழங்கலாம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், உயர்கல்வி படிப்பது, வெளிநாடு செல்வது, சொத்துகள் வாங்குவது, அரசின் பிற துறைகளின் வேலைக்கு போட்டி தேர்வுகளில் பங்கேற்பது போன்றவற்றுக்கு, நியமன அதிகாரிகளிடம், முன் அனுமதி பெற வேண்டும்.
இதன்படி, உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இணை இயக்குனரிடம் மனு அளித்து, அனுமதி பெற்று வந்தனர்.
பள்ளிக்கல்வி துறையில், தற்போது நிர்வாக சீர்திருத்தம் மேற்கொண்டதால், சி.இ.ஓ.க்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி, முதுநிலை ஆசிரியர்களை நியமிக்கும் அதிகாரம், சி.இ.ஓ.,க்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
எனவே, உயர்கல்வி படிப்பதற்கான அனுமதி பெறுவது, போட்டி தேர்வுகளில் பங்கேற்க அனுமதி பெறுவதற்கு, ஆசிரியர்களின் கோப்புக்களை, சி.இ.ஓ.,க்களே ஆய்வு செய்து, விதிப்படி அனுமதி வழங்கலாம் என, பணியாளர் பிரிவு இணை இயக்குனர், நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
எந்த புத்தகம் எந்த நூலகத்தில்?'மொபைல் ஆப்'பில் அறியலாம்
எந்த புத்தகம் எந்த நூலகத்தில்?'மொபைல் ஆப்'பில் அறியலாம்
எந்த புத்தகம், எந்த நுாலகத்தில் உள்ளது என்ற விபரங்களை, இனி, 'மொபைல் ஆப்' வழியே தெரிந்து கொள்ளலாம்.அனைத்து பொது நுாலகங்களிலும், டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்த, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான பணிகளை, பொது நுாலகத்துறையின் இயக்குனர், ராமேஸ்வர முருகன் மேற்பார்வையில், இணை இயக்குனர், நாகராஜ முருகன் உள்ளிட்டோர் அடங்கிய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.இதன்படி, அனைத்து நுாலகங்களின் விபரங்களும், மின்னணு பதிவு தொகுப்பாக மாற்றப்படுகிறது.
மாவட்ட மைய நுாலகங்களில், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் துவங்க உள்ளதால், போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் வாங்கும் பணிகள், மேற்கொள்ளப்பட்டுள்ளன.சென்னையில் உள்ள, தேவநேய பாவாணர் நுாலகம் மற்றும் அண்ணா நுாற்றாண்டு நுாலகம் முதல், கிளை நுாலகங்கள் வரையிலும், நுாலகங்களின் பணிகளை நவீனப்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.நுாலகங்களை இணைக்கும், 'மொபைல் ஆப்' தயார் செய்யப்படுகிறது.
புத்தக வாசிப்பாளர்கள், ஏதாவது முக்கியமான புத்தகங்களை படிக்க வேண்டும் என்றால், அந்த புத்தகம் எந்த நுாலகத்தில் உள்ளது என்பதை, மொபைல் ஆப் வழியாக தெரிந்து கொள்ளலாம்.அனைத்து நுாலகங்களிலும் உள்ள புத்தகங்களின் தலைப்புகள், எழுதியவர், பதிப்பு, பதிப்பாளர் போன்ற விபரங்கள், இந்த, 'ஆப்'பில் இடம் பெறும். இதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இந்த பணிகளை, எம்.எஸ்.சுவாமிநாதன், ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, பொது நுாலகத்துறை மேற்கொண்டுள்ளது
50 அரசு பள்ளிகளில் விரைவில் இலவச வைஃபை வசதி
50 அரசு பள்ளிகளில் விரைவில் இலவச வைஃபை வசதி
தமிழகத்தில் முதல்கட்டமாக 50 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச வைஃபை வசதி வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ள, கல்வியில் பின்தங்கிய, 13 மாவட்டங்களில் உள்ள, 366 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ரூ. 9.06 கோடி மதிப்பில், இலவச வைஃபை வசதியை ஏற்படுத்த, அரசுஒப்புதல் அளித்தது.
இதில் முதல்கட்டமாக, 50 அரசு மேல் நிலைப்பள்ளிகளில் ரூ.1.23 கோடி செலவில், வைஃபை வசதியை வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: முதல்கட்டமாக 50 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்தச் சேவையை வழங்க, "டெண்டர்' கோரப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யப்பட்டு, இரண்டு மாதங்களில் பள்ளிகளுக்கு இலவச வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன என்றனர் அவர்கள்.
வியாழன், 3 மே, 2018
பெயருக்கு நடுவில் Fire gif
Power point மூலமாக பெயரை எப்படி எரிய (Fire.gif) வைப்பது.
எரிய வைச்சி தான் பாப்போமே எப்டி இருக்குன்னு..
Click 👇👇👇
https://youtu.be/6JK6vWFnPFI
உயிர் எழுத்துகள் (தனி எழுத்துகளாக)
கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும். Click to download
-
Directorate of Elementary Education DPI Complex College Road, Chennai-600006 (PBX Nos. 28253684 & 28253709) Website: http://www.tn.gov...
-
மூங்கில் மரங்கள் அதிகமான சுவாசக்காற்றைத்தருகின்றன.... ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுகிற...