புதன், 1 நவம்பர், 2017

LADDER WORK DONE SOCIAL 3 & 4

LADDER WORK DONE SCIENCE 1 - 4

LADDER WORK DONE MATHS 1 - 4

LADDER WORK DONE ENGLISH 1 - 4

LADDER WORK DONE TAMIL 1 - 4

SYLLABICATION RULES

FESTIVEL ADVANCE FORM

NHIS FORM

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

GEO BOARD

GEO BIARD யை பயன்படுத்தி கணிதம் கற்பித்தல்..

https://youtu.be/JHg0QtwCKHg

Google Translator

How to use google translator in simple way..

https://youtu.be/1xsszcS70Qo

GST tax

#GST #NEEDTOKNOW 

GST வரிவிதிப்பு முறையை பயன்படுத்தி GST வரம்புக்குள் உட்படாத நிறுவனங்களும் அவர்களது ரசீதில் CGST,SGST என்று வரி விதிப்பதாக பலபேர் தெரிவிக்கிறார்கள்.
ஆகவே அனைவரும் தெரிந்துகொள்ள இதை பதிவிடுகிறேன்.

நிறுவனங்கள் GST வரி வாங்க அனுமதி உள்ளதா என்பதை கண்டறிய 1 நிமிடம் போதுமானது.

முதலில் அவர்கள் கொடுக்கும் ரசீதில் GSTIN எண் அச்சிடப்பட்டுள்ளதா என்று பாருங்கள், இல்லையென்றால் நீங்கள் வரிசெலுத்த தேவையில்லை. அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள்.

GSTIN எண் இருந்தும் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், அதுவும் 1 நிமிடத்தில் கண்டுபிடித்துவிடலாம்.
www.gst.gov.in என்ற இணையதளத்தில் "Search TaxPayer" என்பதை க்ளிக் செய்தால் GSTIN எண் கேட்கும் அதில் உங்கள் ரசீதில் உள்ள எண்ணை பதிவிடுங்கள். பதிவிட்ட உடனே கீழ்வரும் தகவல்கள் தெரியும்:

நிறுவனத்தின் பதிவு பெயர்.
மாநிலம்
பதவு தேதி
நிறுவனத்தின் அமைப்பு
வரிசெலுத்தும் வகை
GST பதிவின் நிலை

என அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

அப்படி அந்த எண் இந்த தகவலில் ஒத்துப்போகவில்லை என்றால் நீங்கள் வரிசெதுத்த தேவையில்லை. அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள்.

தகறாரு செய்தால் 14404 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம்.

மேலும் core.nic.in என்ற இணையதள முகவரியில் தங்கள் குறைகளையும், குற்றச்சாட்டு களையும் பதிவிடலாம்.

நிறுவனம் ஏமாற்றுகிறது என்றால் இந்த அளவிற்கு நீங்கள் செல்ல தேவையே இருக்காது. மொபைல எடுத்து இரு இந்த நம்பர் இருக்கா இல்லையானு பாக்குறேன்னு சும்மா டைப் பண்ணாலே சார் நீங்க குடுக்க வேணாம் சார் கெளம்புங்க சார்னு சொலிடுவான்

அரசு குற்றங்களை களைய நமக்கு அனைத்து வழிகளையும், அதிகாரத்தையும் கொடுத்துள்ளது. அதை நாம்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
https://gst.gov.in/

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

பசாபுசா கொடுத்த நம்பிக்கை – விழியன்

*பசாபுசா கொடுத்த நம்பிக்கை  – விழியன்*

_(மழலைக் கதை வரிசை)_

அந்த கடற்பறவை பதட்டத்துடன் பறந்து வந்தது “பென்குயின் நண்பர்களே எல்லோரும் இங்கே வாருங்கள்” எனக் கூக்குரல் இட்டது. பள்ளிக்கு தயாராகிக்கொண்டிருந்த பென்குயின்கள், மீன்வேட்டைக்கு தயாராகிக்கொண்டிருந்த பென்குயின்கள், மருத்துவமனைக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த பென்குயின்கள் என எல்லா பென்குயின்களும் கூடின. எல்லா வகையான பென்குயின்களும் கூடின. “என்னாச்சு அமோங்கு? ஏன் இத்தனை பதட்டம்” என்று கேட்டது ஒரு வயதான பென்குயின்.

“நாம மோசம் போகப்போறோம். இதுவரை மனிதர்களே வராத நம்ம பகுதிக்கு இப்ப மனிதர்கள் வரப்போறாங்க. ஒரு கப்பல் நம்ம பகுதியை நோக்கி வருதாம். நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வந்திருக்கு. அவர்கள் வந்தால் நம் நிலைமை மோசமாகிவிடும்” என்றது அமோங்கு. அது தான் அந்த கடற்பறவையின் பெயர்.

மொத்த பென்குயின் உலகமும் உறைந்து போனது. கடும் குளிர் வேறு. ஆமாம் அண்டார்ட்டிகா பற்றி தெரியும் தானே? முழுக்க பனி பிரதேசம். மனிதர்கள் ரொமப் ரொம்ப குறைவு. அங்கே வாழ்வது சிரமம். ஆனால் வருடம் முழுக்க ஆராய்ச்சி செய்ய அங்கே வருவார்கள். அட அங்கே பென்குயின்கள் பயந்துபோயிருக்கு நமக்கென்ன பேச்சு இங்கே.

இப்ப என்ன செய்வது என குழப்பம். சில வயதான பென்குயின்கள் “வாங்க அந்த பகுதிக்கு போய்விடுவோம், அங்கே சில குகைகள் இருக்கு அங்கே மறைந்துகொள்ளலாம்” என்றன. சில பென்குயின்கள் “எவ்வளவு தூரம் ஓட முடியுமோ அவ்வளவு தூரம் ஓடுவோம் வாங்க” என்றன. இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தினை தெரிவித்தன. ஆனால் யாருக்கும் அங்கே இருந்து போக மனம்வரவில்லை. அங்கே சென்றாலும் அவர்கள் வந்துவிட்டால் என்ன செய்வது?

யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் ஒரு சின்ன பனிமலை மீது ஏறியது பசாபுசா. அது ஒரு தேவதை வகை பென்குயின். குட்டி பென்குயின். இரண்டாம் வகுப்பிற்கு செல்கின்றது “பெரியவர்களே, நண்பர்களே. நாம் ஏன் இங்கிருந்து போகவேண்டும். நாம் மனிதர்களை பயமுறுத்துவோம். அவர்களை இங்கே வரவிடாமல் தடுப்போம்” என்றது. ஒரு நிமிடம் அங்கே மெளனம் நிலவியது.
“எப்படி?” என்றது ஒரு வயதான ராஜ பென்குயின்.

பசாபுசாவின் கண்கள் மின்னியது. அது திரும்பி “அதோ அங்கே இரண்டு மிகப்பெரிய பனிமலைகள் இருக்கின்றன பாருங்கள். கப்பல் வரும்போது நாம் இதனை வேகமாக தள்ளுவோம். வேகமாக வரும் பனிமலையைப் பார்த்து அவர்கள் நிச்சயம் பயந்துவிடுவார்கள். வந்த திசையில் போய்விடுவார்கள்” என்றது.

மீண்டும் மெளனம். யாரும் எதுவும் செய்யவில்லை. “செய்வோம்” என்றது இன்னொரு குட்டி பென்குயின். அந்த குரல் ஓங்கி ஓங்கி ஒலித்தது. செய்வோம் செய்வோம் என அந்த பகுதியே அதிர்ந்தது.

அமோங்கு பேசியது “இது மிகவும் சவாலான காரியம். ஆனால் நாம் எல்லோரும் நினைத்தால் இது நிச்சயம் சாத்தியம். நான் சில பலமான கடல்மிருகங்களை அழைத்து வருகின்றேன். அவர்கள் நமக்கு உதவுவார்கள்” என்று சொல்லியபடி பறந்தது.

கிடுகிடுவென எல்லோரும் ஒன்றிணைந்தார்கள். இரண்டு குழுக்களாக பிரிந்தார்கள். இரண்டு பெரிய பனிமலைக்கு பின்னர் குழுமினார்கள். அமோங்கு அழைத்து வந்த மற்ற வலுவான கடல் பிராணிகளும் இவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். பசாபுசா தான் திறமையாக திட்டமிட்டது. என்ன செய்ய வேண்டும் யார் எங்கு நிற்க வேண்டும் என திட்டமிட்டது. அமோங்கு தான் இந்த பனிமலைக்கும் அந்த பனிமலைக்கும் பறந்து பறந்து வேலைகளை பார்வையிட்டது.

கப்பலின் வருகைக்காக காத்திருந்தார்கள். அன்று இரவு யாரும் தூங்கவில்லை. விடிந்தவுடன் அமோங்கு உயர பறந்து கப்பல் எங்கே வருகின்றது என நோட்டம் விட்டது. ‘கூகூ…’ என சத்தமிட்டு கப்பலின் வருகையை அறிவித்தது.

“நாம் செய்வோம்..
நாம் தான் செய்வோம்
நம்மால் முடியும்
நிச்சயம் முடியும்”

என்று ஒரு பாட்டினை பசாபுசா சத்தமாக பாடி எல்லோரையும் உற்சாகமூட்டியது. கப்பல் வரவும் இரண்டு பக்கமும் பனிமலை அந்த கப்பலை நோக்கி வேகமாக நகரவும் கப்பலில் இருந்தவர்கள் பயந்துவிட்டார்கள். கப்பல் நின்றது. சில நிமிடங்களில் அப்படியே திரும்பியது. அது தூர தூர ஒரு புள்ளியாக மறைந்தது.

ஹே…ஹே வென மகிழ்ச்சி குரல் அந்த பகுதியையே இன்னும் உறைய வைத்தது.

- விழியன்

பாம்பைப் பிடித்த குரங்கு

பாம்பைப் பிடித்த குரங்கு

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த ஒரு குட்டிக்குரங்குக்கு அது வேடிக்கையாக இருந்தது.

மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.

பாம்பு, குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .

குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது. கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

"ஐயய்யோ இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன.

தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின், வேதனை எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன. "ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக்கிட்டேனே" என்று குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.

நேரம் ஓடிக் கொண்டே இருந்தது .

உணவும் நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய் விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது.

அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததைத் தெரிந்து கொண்டார்.

குரங்கை நெருங்கி வந்தார்.

சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில், தன்னை நோக்கி ஒரு மனிதர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

அவர் நெருங்கி வந்து சொன்னார், "எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.

குரங்கோ, "ஐயய்யோ; பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும்" என்றது.

அவர் மீண்டும் சொன்னார், "பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு".

அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.

அட... நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா... குரங்குக்கு உயிர் வந்தது .

அவரை நன்றியுடன் பார்த்தது .

"இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

நட்பு நடை - விழியன்

*நட்பு நடை - விழியன்*

_(மழலைக் கதை வரிசை)_

இரண்டு நாட்களாக தனது நண்பன் மக்கட்டா என்ற மரவட்டையை காணவில்லை. வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு அவன் வரவே இல்லை. என்னாச்சு அவனுக்கு என்று கவலைப்பட்டது பட்டாம்பூச்சி. பட்டாம்பூச்சியின் பெயர் பூம்பூம். வெகுநாட்களாகவே மக்கட்டாவும் பூம்பூமும் நண்பர்கள். சரி வீட்டிற்கே போய்விடலாம் என்று மரவட்டையின் வீட்டை நோக்கிச் சென்றது பூம்பூம் பட்டாம்பூச்சி. அங்கே வீட்டின் மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தது மரவட்டை. “நண்பா மக்கட்டா, என்னாச்சு, ஏன் இப்படி படுத்து இருக்க?” என்று விசாரித்தது.

விசாரித்து பார்த்தால் ஒரு சின்ன விபத்தில் மரவட்டையின் சில கால்கள் நசுங்கியும் சில கால்களில் காயமும் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் நடக்க மிகவும் சிரமப்படுகிறது. இதனால் வீட்டை விட்டே நகர முடியவில்லை. தினசரி உணவிற்கு கூட வெளியே செல்லமுடியவில்லை என்று கூறி மக்கட்டா வருத்தப்பட்டது. பூம்பூம் பட்டாம்பூச்சிக்கு தன் நண்பனுக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என்று தோன்றியது. உடனே தன்னுடைய மற்றொரு நண்பன் தவளையின் நினைவு வந்தது.

அந்த தவளையார் ஊரில் உள்ள முக்கியமான செம்மார். செம்மார் என்றால் காலணிகளை தைப்பவர். அவருடைய பெயர் பொம்மர். காட்டில் இருந்து சிங்கம், புலி, கரடிக்கு கூட காலணி தைக்க விண்ணப்பங்கள் வரும். சிறப்பாக காலணிகளை செய்து முடிக்கும். அந்த பொம்மர் தவளையின் இருப்பிடத்திற்கு பட்டாம்பூச்சி பறந்து சென்றது. வாட்டமான முகத்தை பார்த்த பொம்மர், என்ன பிரச்சனை என்று விசாரித்தது. “என்னுடைய மரவட்டை நண்பனுக்கு சில கால்கள் உடைந்துவிட்டன, சில கால்களில் அடிபட்டுவிட்டது, உங்களுடைய அனுபவத்தைக் கொண்டும் அறிவினைக்கொண்டும் அவனுக்கு காலணிகளை செய்து தரவேண்டும்” என கேட்டுக்கொண்டது.

ஆமாம் மரவட்டைக்கு எத்தனை கால்கள் தெரியுமா? 100க்கும் அதிகமான கால்கள். அதற்கு காலணிகள் செய்வது என்பது சிரமமான காரியம். தவளையார் யோசித்து கொண்டிருந்ததைப் பார்த்த பட்டாம்பூச்சி ”உங்கள் உழைப்புற்கு ஏற்றவாறு நாங்கள் ஏதேனும் பொருள் தருகின்றோம்” என்றது பூம்பூம் பட்டாம்பூச்சி. “இது என் திறமைக்கான சவால், அதனால் இந்த முயற்சியில் வெற்றிபெற்றாலே சந்தோஷம்” என்றது தவளை.

மரவட்டையின் இல்லத்திற்கு இருவரும் சென்றனர். அதற்குள் தவளை செருப்பு செய்து தரும் செய்தி அறிந்து பக்கத்தில் இருந்த புழு பூச்சிகள் எல்லாம் மரவட்டையின் வீட்டு வாசலில் காத்திருக்க ஆரம்பித்தன. மரவட்டையில் பழுதான கால்கள், அடிபட்டிருக்கும் கால்கள் என எல்லா கால்களின் அளவினையும் தவளை அளந்தது. சின்ன சின்ன கணக்குகளைப் போட்டது. வழக்கமாக பெரிய காலணிகளை மட்டுமே செய்து வந்த தவளைக்கு இப்போது என்ன பொருளைக் கொண்டு காலணி செய்வது என குழப்பம். இது பெரிய சவால்.

சில நிபுணர்களை கலந்து ஆலோசித்தது. விசேஷமான ஒரு பூவினையும், இலையினையும் கலந்து அதிலிருந்து கிடைக்கும் தழையை கொண்டு காலணி செய்தால் காலின் காயம் குணமாகும், காலணியாகவும் பயன்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். அதன்படியே அந்த தழையை தவளை தயாரிக்க முடிவு செய்தது.

ஒரு இரவு முழுக்க அந்த தழையினை தயாரித்தது தவளை. மறுநாள் குட்டி காலணியை செய்ய அதற்கு லென்ஸ் தேவைப்பட்டது. மேலும் சில பொருட்களும் தேவைப்பட்டது. அனைத்தையும் வாங்கிவர மதியம் ஆனது. பிறகு ஒவ்வொரு காலணியாக ஒவ்வொரு காலுக்கு செய்யத்துவங்கியது. சில காலணிகள் பெரியதாகவும் சில சிறியதாகவும் இருந்தது. அந்த இரவு முழுக்க தூங்காமல் எல்லா காலணிகளையும் செய்து மரவட்டையின் காலில் போட்டுவிட்டது. ஒரே சீராக இருக்கட்டும் என்று எல்லா காலணிகளுக்கும் வண்ணத்தை தீட்டியது பொம்மர் தவளை. காலணிகளுடன் மரவட்டையை பார்க்க அழகாக இருந்தது.

பூச்சிகளின் உலகமே மரவட்டையின் வீட்டு வாசலில் காத்துக்கொண்டு இருந்தது. மரவெட்டை மெல்ல எழுந்து ஆடி அசைந்து வெளியே வந்தது. நடப்பதற்கு சிரமமே இருக்கவில்லை. காலணியுடன் வந்த மரவட்டையை பார்த்ததும் அனைத்து பூச்சிகளும் கைத்தட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தன. மிகவும் நன்றியுடன் பொம்மர் தவளையும், தன் நண்பன் பூம்பூமையும் மரவட்டை பார்த்தது.

- விழியன்

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

மடையர்கள்

*மடையர்கள்*

ஏரியை  வடிவைமைத்த  பிறகு  அதிலிருந்து  தண்ணீர் வெளியேறத்  தமிழன் கண்டுபிடித்த  தொழில்நுட்பம்தான் *"மடை"*

மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன. . வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே  தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும். அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள். இதுதான் ஆரம்பகால *மடை.*
பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் *மடைகள்* அமைக்கப்பட்டது.

வெள்ளக்காலங்களில் *மடைகளைத்* திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். *மடையைத்* திறப்பது சாதாரண விடயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும்.

மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் *மடையின்* அடைப்பை திறந்துவிடுவார். மடை திறந்ததும் புயல்வேகத்தில் வெளியேறும் வெள்ளம் *மடைத்திறந்தவரையும்* இழுத்துச்செல்லும். அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம்.

*மடை* திறக்க செல்பவர்கள் உயிர்பிழைப்பது அரிது. அவர்கள் தம் மனைவி, பிள்ளைகள் மற்றும் அனைவரிடம் பிரியா விடை பெற்றுச்செல்வார்கள். *மடை* திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம், மீண்டவர்கள் குறைவு. இவர்கள்தான் *"மடையர்கள்"* என அழைக்கப்பட்டார்கள். வரலாற்றின் பக்கங்களில் இந்த தியாகிகளைப் பற்றிய குறிப்புகள், கல்வெட்டுக்கள், பதிவுகள் எதுவும் இல்லை. வரலாறு எழுதுபவர்கள் இதைக் கருத்தில் கொள்ளலாம் அல்லவா?

எம் குழந்தைகளுக்கு இவ்வீரத் தமிழ்த்தியாகிகளின் வாழ்வு ஒரு ஊக்கத்தையும் தியாகத்தையும் ஊட்டும் அல்லவா?
 

இனி எந்த ஒரு மாணவனையாவது  *"மடையா"* என்று அழைப்பது எனக்குச் சற்று மனநாணம் தான்.. *உங்களுக்கு ??*

PALIMDROME words ( TAMIL & ENGLISH)

எந்த ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுதும் வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும்  எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல் வார்த்தைகள் அமைவது இதற்குப் பெயர்தான் ‘பேலின்ட்ரோம்’ (Palindrome) என்பதாம்

தமிழில் இதுவரை நான் அறிந்த பாலின்ட்ரோம் வார்த்தைகள்!

விகடகவி
மாவடு போடுவமா,
துவளுவது
தாளாதா
வா தாத்தா வா!
மாலா போலாமா,
தேருவருதே
மேகமே
வாடவா
தாத்தா
கலைக
வினவி
யானை பூனையா,
யானையா பூ யானையா,
பாப்பா
தேருவருதே
தந்த
மாறுமா
தேயுதே
மேளதாளமே.
மாடு ஓடுமா
கலைக
கலக
மோருபோருமோ,
போ வாருவா போ.
மாடமா
மாதமா
மானமா
மாயமா
கற்க
மாமா
காக்கா
சிவா வாசி

ஆங்கிலத்தில் இதுவரை நான் அறிந்த (PALIMDROME) வார்த்தைகள் !

1: civic
2: Dewed
3: deified
4: dad
5: mom
6: devoved
7: Hannah
8: peeweep
9: repaper
10: kayak
11: minim
12: radar
13: murdrum
14: Malayalam
15: madam
16: lemel
17: level
18: racecar
19: radar
20: redder
21: bob
22: pop
23: tot
24: refer
25: reviver
26: rotator
27: rotavator
28: stats
29: solos
30: tenet
31: terret
32: testset
33: Kinikinik
34: Wassamassaw
35: Yreka Bakery
36: Navan
37: Cain: a maniac.
38: A Toyota.
38: Race fast, safe car.
39.RACECAR
40.MALAYALAM
41.EVE
42.LEVEL
43DEED
44.ROTOR
45.CIVIC
46.POP
47.MADAM
48.EYE
49.NUN
50.RADAR
51.TOOT

CPS ACCOUNT SLIP பெற கீழ் உள்ள LINK ஐ CLICK செய்யுங்கள்

DFC PROJECT MODEL


GEO BOARD


திங்கள், 6 பிப்ரவரி, 2017

படித்ததில் வலித்தது

🤔 விருந்தோம்பலை உலகிற்கு உரைத்தவன் இன்று
விரும்பியவர் வீட்டிற்குச் செல்லவே முன் அனுமதி
வேண்டுகிறான்.

🤔 பந்தல் இட்டு பலரின் தாகம் தீர்த்தவன் இன்று
புட்டியில் தண்ணீரை அடைத்து வீதியெங்கும்
விற்கிறான்.

🤔 வழிப்போக்கனுக்கே வாசலில் திண்ணைக் கட்டி வைத்தவன் இன்று வாழ்க்கைத் தந்தவர்களையே வாசலில் தங்க வைக்கிறான்.

🤔 அரிசி மாவு கோலத்தில் அண்டை வீட்டு கோழிக்கும் அன்னம் படைத்தவன் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் சுண்ணாம்புக் கட்டியில் கோலம் போடுகிறான்.

🤔 கம்பங்கூழும் , கேப்பக்கஞ்சியும் குடித்து கம்பீரமாய் வலம்வந்தவன் இன்றுக் கண்ட உணவகங்களில் உண்டு வியாதியை விலைக்கு வாங்குகிறான்.

🤔 வந்தவரை வரவேற்று வாழை இலையிட்டு பந்தி முறையில் உணவளித்து வீட்டு விழாக்களை கொண்டாடியவன் இன்றுக் கையில் பாத்திரத்தை
ஏந்திக் கொண்டு உண்கிறான்.

🤔 இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்லி மரியாதை தந்தவன் இன்று இடித்து தள்ளிவிட்டால் கூட மன்னிப்பு கேட்க நேரமில்லாமல் ஓடுகிறான்.

🤔 கட்டியவளை தொடவே அனுமதி எதிர்பார்த்தவன் இன்று காமத்திற்கும் காதலுக்கும் வேறுபாடு புரியாமல் தவிக்கிறான்.

🤔 தமிழ் மொழியும் தாயும் ஒன்றே என்றவன் இன்று
அயல் மொழியை எல்லாம் மொழி அல்ல அறிவு என்கிறான்.

🤔 ஆடை மறைப்பது வெறும் உடலை அல்ல மானத்தை என்றவன் இன்று ஆடைகுறைப்பை நாகரீக வளர்ச்சி என்கிறான்.

🤔 இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தவன் என்ற வரலாறே  தெரியாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் இன்றையத் தமிழன்.
🤔😳

மனதை தொட்ட வரிகள்.

மனதைத் தொட்ட வரிகள்"!

* பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம். 

* உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.

* ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. 

* தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

* குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும். 

* வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல். 

* மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது. 

* நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

* அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

* செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை! 

* நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

* பறக்க விரும்புபவனால் படர முடியாது. 

* மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

* ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

.

அறிந்து கொள்ள..


             ✍✍✍
நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்...! 📲

>🗡
🚌பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639

🗡
🛍பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:-Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

🗡
👴🏼👩🏻மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

🗡
👩🏻வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம்ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

🗡
🚂🚃ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்:  044-25353999 / 90031 61710 / 99625 00500

🗡
🚕ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்—044-24749002 / 26744445

🗡
🏃🗣சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற     95000 99100 ( SMS )

🗡
🗣👤மனிதஉரிமைகள் ஆணையம் ————-––      044-22410377

🗡
🚌மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-      09383337639

🗡
🚨🚔📲
போலீஸ் SMS :- —————————————-      9500099100

🗡
👮👞💸போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-      9840983832

🗡
🚎போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–       98400 00103

🗡
💳வங்கித் திருட்டு உதவிக்கு ———————-      9840814100

🗡
👩🏻வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-      044-28551155
பெண்களுக்கான உதவி : ——-—-–———-         044-23452365

🗡
👩🏼தமிழ்நாடு மகளிர் ஆணையம் —————        044-25264568

🗡
🐯🦁🐶🐒🐘🐎🐅
விலங்குகள் பாதுகாப்பு ————————     044 – 22354959 / 22300666

🗡
👮🏽🚓போலீஸ் : —————————————–——   100

🗡
🚒தீயணைப்புத்துறை:————————-—–101

🗡
🚑ஆம்புலன்ஸ் : —————————————-        102, 108

🗡
🚌🚦போக்குவரத்து விதிமீறல———————–         103

🗡
🚌🚨விபத்து :———————————————-–           100, 103

🗡
👩🏻பெண்களுக்கான அவசர உதவி : ——-—-–        1091

🗡
👶🏻🙇குழந்தைகளுக்கானஅவசர உதவி :——-–         1098

🗡
🚨🚑அவசர காலம் மற்றும் விபத்து : ———-—        1099

🗡
👴🏼முதியோர்களுக்கான அவசர உதவி:—-—        1253

🗡
🛣🚌தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி:         1033

🗡
🏝🏖கடலோர பகுதி அவசர உதவி : ———-—–         1093

🗡
💉🌡ரத்த வங்கி அவசர உதவி : —————-—–          1910

🗡
👁👁கண் வங்கி அவசர உதவி : —————-—–          1919

🗡
📲🇮🇳நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.
📲🔐நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

உயிர் எழுத்துகள் (தனி எழுத்துகளாக)

கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும். Click to download