சனி, 31 அக்டோபர், 2015

டெங்கு பற்றி அறிவோம்!

டெங்கு காய்ச்சல்.

தோழர்களே உங்களுக்கு காய்ச்சலின் போது நீர்தாகம் அதிகமாக வருகிறதா?
தொண்டை வரண்டு போகிறதா?
இது டெங்குவின் அறிகுறி.

சட்டென்று பப்பாளி இ லையை பிடுங்கி அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து 4 வேளையாக பகிர்ந்து குடிக்கவும்.
டெங்கு வைரஸ் உடம்பில் உள்ள நீர்சத்தை அழித்துதான் மரணத்தை வரவைக்கிறது.

முடிந்த அளவு நீர், பழச்சாறுகள் அருந்துகள்.  சிறுநீரை அடிக்கடி கழியுங்கள்.
சர்க்கரை உப்பு கரைசலை இரண்டு மூன்று வேளை பருகுங்கள்.
  நிலவேம்பு பொடியை நீரில் கொதிக்க வைத்து பருகுங்கள்.

சாதாரன காய்ச்சல் என்று அஜாக்கிரதை கொள்ளாதீர்.
ஒரு கொசு ஒரு இரவில் 25 கிலோமீட்டர் வரை பயனிக்கும்.

டெங்குவை குணமாக்க மருத்துவத்தில் முழுமையான மருந்து இதுவரை இல்லை.  நான் சொன்ன முறையை பயன்படுத்துயங்கள். முழுமையாக குணமடையும்.

எந்த ஒரு நோய் குணமாகுவதிற்கு மனசுதான் காரணம். உங்கள் மனசை ஏமாற்றுங்கள், தைரியமாக இருங்கள்.

பாதிக்கபட்டவருக்கு தைரியம் சொல்லாதீர்கள். ஏனென்றால் நீங்கள் தைரியம் சொல்லும்போது அவர்களுக்கு அதிக பயத்தை உண்டுபன்னும். மாறாக அவருக்கு பிடித்தமான விஷயங்களை உரையாடுங்கள்.

உங்கள் வீட்டில் இருப்பு பொருட்கள், சமையலறை, பயன்படுத்தாத பாத்திரங்களில் இவ்வகை கொசு இருக்கலாம்.  இதை அழிக்க விளம்பரங்களில் வரும் கொசு அழிப்பான் வேண்டவே வேண்டாம்.
  தீக்கனியின் மீது பச்சையான வேப்பிலை போட்டு உங்கள் வீடு முழுவதும் புகை காட்டுங்கள். (சாம்பிரானி புகை காட்டுவது பொல்)
கொசு முற்றிலுமாக அழிவதுடன் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியா வைரஸ் உம் முற்றிலும் அழித்து விடும்.

அருகிலிருப்பவரிடம் எடுத்துரையுங்கள்.
உங்களால் ஒரு உயிர் முதல் பல உயிர் வரை காப்பாற்ற படலாம்.

சனி, 24 அக்டோபர், 2015

SABL & ALM TIME TABLE

SABL & ALM TIME TABLE

SABL TIME TABLE
8.50-9.10 CLEANING
9.10-9 .30 PRAYER
9.30-9.35 MEDITATION
9.35-12.10 SUBJECT 1 
12.10-12.40 VALUE EDUCATION, YOGA ETC 
12.40-1.15 LUNCH
1.15-1.45 DICTATION, TV PROGRAMMES, ACTIVITIES etc.

1.45-3.50 SUBJECT 2
3.50-4.10 COMPUTER, GAMES etc.
4.10 CLASSROOM PRAYER.
(FRIDAY 3.10-4.10 CULTURALS
20MIN PRAYER ONLY ON MONDAY OTHER DAYS 15MIN PRAYER)
ALM  Time table
8.50-9.10  CLEANING
9.10-9 .25 PRAYER
9.25-9.30 MEDITATION
9.30-11.00 SUBJECT1
11.00-12.30 PERIOD  2
12.30-12.40 YOGA
12.40-1.15 LUNCH
1.15-1.45 ACTIVITIES
1.45-3.15 PERIOD 3
3.15-4.00  PERIOD 4
4.00-4.10 EVENING ACTIVITIES.
(FRIDAY 3.10-4.10 CULTURALS
 20MIN PRAYER ONLY ON MONDAY OTHER DAYS 15MIN PRAYER)

அறிவியல் கருவிகள்!

🎯🎯🎯🎯🎯🎯🎯

அறிவியல் கருவிகள்

1. வெப்பத்தை அளக்க - கலோரி மீட்டர்
2. கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக
அளக்க - குரோனோ மீட்டர்
3. நீருக்கடியில் சப்தத்தை அளவிட - ஹைட்ரோபோன்
4. வெப்பநிலைப்படுத்தி - தெர்மோஸ்டாட்
5. மனித உடலின் உள் உறுப்புகளை காண -
எண்டோஸ்கோப்
6. கடல் மட்டத்திலிருந்து உயரம் காண - ஆல்டி
மீட்டர்
7.உயர் வெப்பநிலையை அளக்க - பைரோ மீட்டர்
8. மின்னோட்டத்தை அளக்க - அம்மீட்டர்
9. காற்றின் திசைவேகம் காண - அனிமோ மீட்டர்
10. வளிமண்டல அழுத்தம் காண - பாரோ மீட்டர்
11. நீரின் ஆழத்தை அளவிட - ஃபேத்தோ மீட்டர்
12. திரவங்களின் ஒப்படர்த்தி தனமையை அறிய -
ஹைட்ரோ மீட்டர்
13. பாலின் தூய்மையை அறிய - லாக்டோ மாட்டர்
14. சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய - ஓடோ
மீட்டர்
15. பூகம்ப உக்கிரம் அளக்க - சீஸ்மோ மீட்டர்
16. ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது -
ஸ்டிரியோ ஸ்கோப்
17. செவிப்பறையை பரிசோதிக்க - ஓடோஸ்கோப்
18. காகிதத்தின் கனத்தை அளவிட - கார்புரேட்டர்
19. காற்றுடன் பெட்ரோலைக் கலக்க - கார்புரேட்டர்
20. நிறமாலைமானி - ஸ்பெக்ட்ராஸ்கோப்
21. முட்டை குஞ்சு பொறிக்க - இன்குபேட்டர்
22. நுரையீரலில் இருந்து சுவாசிப்பதை காண - ஸ்கோப்
ட்ராங்கோ
23. கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட - பிலிம்சால்
கோடு
24. மூலக்கூறு அமைப்பை அறிய - எலக்ட்ரான்
நுண்ணோக்கி
25. மாலிமிகள் திசை அறிய - காம்பஸ்
26. இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத்
தொலைவுகளை அளக்க - செக்ஸ்டாண்ட்
27. தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும்
தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி
- டெலி பிரிண்டர்
28. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது - லெசர்
(LASER )
29. எதிரி விமானத்தை அறிய - ரேடார் (RADER)
30. இருதயத் துடிப்பை அளவிட - E.C.G (Electro
Cardio Gram)
31. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க,
பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண
- ஸ்டெத்தாஸ்கோப்
32. மழையளவை அளக்க - ரெயின் காஜ்
33. இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம்
காண - ஸ்டெத்தாஸ்கோப்
34. நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்க -
மைக்ரோஸ்கோப்
35. தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க -
பைனாகுலர், டெலஸ்கோப்
36. சமபரப்பை அளக்க உதவும் கருவி - ஸ்பிரிட்
லெவல்
37. காந்தப் புலங்களை அறிய - மாக்னடோ மீட்டர்
38. இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய
- ஹிமோசைட்டோ மீட்டர்
39. நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட -
கானாங்கின் போட்டோ மீட்டர்
40. ஒளிவிலகல் எண்ணை அளக்க - ஸ்பெக்ட்ரோ
மீட்டர்
41. மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி -
ஸ்பெக்ட்ரோஸ்கோப்
42. கோளக வடிவப் பொருட்களின் வளைவினை
அளக்க -ஸ்பியரோ மீட்டர்
43. மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை
அறிய - பைரோ மீட்டர்
44. உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட -தெர்மோ
மீட்டர்
45. திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும்
கருவி - பைக்கோமீட்டர்
46. படிகங்களின் கோணங்களை அளக்க - கோனியோ
மீட்டர்
47. ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை
அளக்க - ஆல்கஹாலோ மீட்டர்
48. ஒளியின் அளவை அறிய போட்டோ மீட்டர்
49. நீராவி அழுத்தத்தை அளக்க - மானோ மீட்டர்
50. சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க -
கால்வனா மீட்டர்
51. மின்னழுத்த வேறுபாட்டை அளக்க - வோல்ட்
மீட்டர்
52. கடலின் ஆழம் அறிய - சோனா மீட்டர்
53. விமானங்களின் வேகத்தை அறிய - டேக்கோ
மீட்டர்
54. கார் ஒடும் வேகத்தை அறிய - ஸ்பீடோ மீட்டர்
55. இரத்த அழுத்தத்தை அளக்க - பிக்மோ மானோ
மீட்டர

வெள்ளி, 23 அக்டோபர், 2015

தும்மல் வந்தால்!

தும்மல் வந்தால் அதற்கு வைத்தியம் உங்கள் சுண்டு விரல்தான்..!
நமது உடல் தம்மை தாமே தற்காத்துக்கொள்ள/சுத்தப்படுத்திக்
கொள்ள மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் நுரையீரலில் உள்ள காற்றை, மிக வேகமாக வெளியேற்றும் ஒரு அற்புதமான செயல்தான் தும்மல்.
மூச்சுக்குழல், நுரையீரல், மார்பில் தேவை இல்லாத பொருட்கள் (தூசிகள், துகள்கள்) நுழைந்தாலோ, சேர்ந்தாலோ ஊடுருவாமல் தடுக்க மார்பு மற்றும் தொண்டை தசைகள் சுருங்கி வாய் வழியாக தும்மல் மூலமாக அவைகள் வெளியேற்றப்படுகின்றன.
நுரையீரலில் இருந்து வெளிப்படும் நாம் போடும் (தும்மல்) காற்று சுமார் நூற்று ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் வெளிப்படும் .
உள்ளே நுழைந்த தூசிகள், துகள்கள், கிருமிகள் எல்லாம் அந்த காற்றோடு சேர்ந்து வெளியேற்றப்படும். ஆகவே தும்மலை அடக்கக் கூடாது.
ஆனால் அதே சமயத்தில் ஒரு மீட்டிங், திருமணம், ஹோட்டலில் இருந்தாலோ, கைகுழைந்தைகள் அல்லது அதிக நோயினால் பாதிக்கப்படவரை உடல்நலம் விசாரிக்கச் சென்றிருந்தாலோ சிலர் தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுவர்...
அம்மாதிரி நேரங்களில் தும்மலை அடக்க நாம் இடதுகை சுண்டுவிரலை வலது கையால் பிடித்து பின்பக்கமாக இழுக்கவும்.(கோலி அடிப்பதுபோல) அப்படி இழுக்கும்போது தும்மல் பத்து, இருபது வினாடிக்குள் கட்டுக்குள் வரும்.
ஆனால் இந்த முறையை அடிக்கடி உபயோகப்படுத்தக் கூடாது.
ஏனென்றால் நம் உடலில் இருக்கவே கூடாத கழிவுகளை வெளியில் தள்ள நாம் உடலே முயற்சிக்கும் போது அதை தடுத்து நிறுத்தி, நம் உடலை நாமே கெடுத்துக் கொள்ள கூடாது.
அதிகமாக தும்முகிறவர்கள் தும்மலின் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடித்து மருந்துகள், மாத்திரைகள் துணையின்றி சரி செய்துக் கொள்ள வேண்டும்.
சுண்டுவிரல்தானே அதால என்ன செய்யமுடியும்னு நினைக்காதீங்க.. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெருசுங்க.... காசா.. பணமா..... முயற்சித்துதான் பாருங்களேன

MY HIKOO

பூமீயைத் தாண்டி கல் எறிய
ஆரம்பித்து விட்டேன்!

எதற்கும் பாதுகாப்பாக இருங்கள்!
உங்கள் மீதும் நட்சத்திரங்கள் விழலாம்!

சனி, 17 அக்டோபர், 2015

என் முயற்சி!

வேட்கை --
புத்துலகை நீபடைக் க
புதுநூலை நீகற் க!
புத்தகத்தை ஆராயகத் தினுள்ள்
புதுஅகத்தைக் காண்பாய் உன்னுள்!
செக்கென இருப்போன யும்
செழுமண்ணாய் ஆக்கிடு மே!
புதுநாவல் படித்திடு, படைத்திடு
இரவல் கேட்டிடுபிற மொழியிலும்!
புதுஅரிச் சுவடிஆக் கலாம்அப்துல்
கலாம் போல் ஆகலாம்!
வேட்கைகொள் புதுநூலில்! தரணி
இனிபுகழ் பாடும்தமி ழினில்!
பூபாலம் பாடும் வேளை
புது புரவி புறப்படும் நாளை!
© செளந்தர்.....

கொசு_கடிப்பதும்_தவிர்ப்பதும்‬..!

#‎கொசு_கடிப்பதும்_தவிர்ப்பதும்‬..!

* உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு.

* 2.5 மில்லி கிராம் எடைகொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47.

* மழை கொட்டும்போதும் உடல் நனையாமல் துளிகளின் இடுக்குகளில் பறக்க முடிந்த ஒரே பூச்சியினம் கொசு.

* ஒரு விநாடிக்கு 300 முதல் 600 முறை வரை சிறகடிக்கிறது. அதுதான் நீங்கள் கேட்கும் ரீங்காரம்.

* சில வாரங்கள் மட்டுமே ஆயுள்கொண்ட கொசுக்கள் ஆண்டுக்கு 10 லட்சம் மனிதர்களைக் கொன்று குவிக்கின்றன.

* கொசு வகைகளின் எண்ணிக்கை, 3000ஐத் தாண்டியுள்ளது. இதில், 80 வகை கொசுக்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும்.

* ஒரு கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு தேவைப்படும் காலம், 5 நாட்கள் மட்டுமே

* முட்டையிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களுக்குப் பின், கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய முடியும். மேலும், கொசுவுக்கு முள் போன்ற கூரியமுனையுடைய இரத்த உறிஞ்சுக்குழல் உண்டு. கொசுவின் துணை உறுப்புகள் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. 

* உலகின் அபாயகரமான பூச்சியினம் என்று பெரும் பாலான நாடுகளில் அறிவிக்கப் பட்டதும் கொசு தான்.

* ஆண் கொசுவைவிடப் பெண் கொசுவே பெரியது. ஆண் கொசு சைவம். இலை தழைகளிலேயே அது உணவுகொள்ளும். கடிப்பதும் ரத்தம் குடிப்பதும்
பெண் கொசுதான்.

* கடிக்கும்போது ஒரு கொசு இரண்டு குழல்களை உடலுக்குள் நுழைக்கிறது. ஒரு குழல் ரத்தம் உறையாதிருக்க நொதிப்பொருளை செலுத்துகிறது. மறு குழல் உறையாத ரத்தத்தை உறிஞ்சுகிறது.
' ஏடிஸ் ' வகை கொசுதான் டெங்கு பரப்புகிறது.

* ஒரு தொற்று நோயாளியைக் கடித்த கொசு ஆரோக்கியமானவரையும் கடிக்கும்போது தொற்றுக்கிருமிகளை உட்செலுத்தி டெங்கு பரப்புகிறது.
டெங்குவிற்கு மருந்தில்லை; டெங்குவில் மீண்டாலும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடல் மீண்டும் அடைவதில்லை.

* கொசு/நுளம்பு மனிதக் குருதியை நுண்ணிய ஊசி போன்ற வாயுறுப்பால் அகத்துறிஞ்சி தனது வயிறு அல்லது கண்டப்பைக்குள் செலுத்தும். கண்டப்பைக்குள் செலுத்தப்பட்ட குருதி, சில நொதியங்கள் சேர்க்கப்பட்டு நுளம்புக்கான உணவாக கண்டப்பையுள் சேகரிக்கப்படும். அதேவேளை மனித உடலில் இருந்து கொசு/நுளம்பு குருதியை அகத்துறிஞ்சும் போது தனது உமிழ் நீரை மனித உடலுக்குள் பாய்ச்சும். நுளம்பு இனங்களில் அனோஃபிலசு (Anopheles) எனப்படும் நுளம்பினத்தின் பெண் நுளம்புகளே, உலகின் சில பாகங்களில் மனித இறப்பை ஏற்படுத்தும், மலேரியா என்னும் அபாயகரமான தொற்றுநோயை ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தும் நோய்க்காவியாக இருக்கின்றது

* கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் இரசாயனம் அலெத்ரின்(alletrin) சார்பு பொருட்கள் உள்ளன. இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை மனிதனின் சுவாசப்பையில் நச்சுப்பொருள் கலந்து நாளடைவில் மார்புச்சளி, தும்மல் தலைவலி போன்ற உடல்நலக்கேடுகள்விளைகின்றன.

* உடலில் தேங்காய் எண்ணை பூசிக் கொண்டால் இரவில் கொசுக்கள் மட்டுமல்ல வேறு சில் பூச்சிகளும் நம்மை கடிக்காது.


* Vitamin B --- கொசுவின் எதிரி..., இந்த வைட்டமின் B அதிகமாக இருப்பவர்களை கொசு அண்டுவதில்லை...

* கொசுக்கள் பெண்களைத்தான் அதிகமாக கடிக்கும் காரணம் அவர்கள் உடலிலுள்ள ஈஸ்ஸ்ட்ரோஜென்ஸ்கொசுக்களை கவருகின்றன ஆகா பெண் தான் பெண்ணுக்கு எதிரி என்பது கொசுக்கள் விஷயத்திலும் உண்மையே

உயிர் எழுத்துகள் (தனி எழுத்துகளாக)

கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும். Click to download