சனி, 18 ஜூலை, 2015

குழந்தைகளுக்கான அறிவுக்கதை

ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான், 
 அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன், எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான், உட்னே பிச்சைக்காரன் “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான் அதற்க்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம் என்றான் “


பிச்சைக்காரன் “ அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.
வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்
அதற்க்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டான் .


இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன் “ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே ! நன்றாக ஏமாந்துவிட்டாய் “ என்றான்.


அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன் , மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் , அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்க்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் “ என்றவாறே நடக்கலானான்

புதன், 15 ஜூலை, 2015

காமராஜர் பிறந்த தின சிறப்பு பகிர்வு.

🔵இன்று காமராஜர் பிறந்த தினம்🔵

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
காமராஜர்: முக்கிய நிகழ்வுகள்

🌻🌻1903 ஜுலை 15: குமாரசாமி – சிவகாமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

🌻🌻1907: தங்கை நாகம்மாள் பிறப்பு.

🌻🌻1908: திண்ணைப் பள்ளியிலும், ஏனாதி நாயனார் வித்தியாவிலும் கல்வி பயின்றார்.

🌻🌻1909: சத்திரிய வித்தியாசாலாவில் சேர்க்கப்பட்டார்.

🌻🌻1914: ஆறாம் வகுப்பு படித்துக் கொண்ருக்கும்போது பள்ளி செல்வத்தை நிறுத்திக்கொண்டார்.

🌻🌻1919: ஏப்ரல் மாதம் ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் விடுத்த அழைப்பை ஏற்று காங்கிரசின் முழுநேர ஊழியரானார். இதே ஆண்டில் சத்தியமூர்த்தியை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது.

🌻🌻1920: ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார்.

🌻🌻1923: மதுரையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்.

🌻🌻1927: சென்னையில் ‘கர்னல் நீல்’ சிலையை அகற்றும் போராட்டம் நடத்தஅண்ணல்காந்திஜிடம்அனுமதிபெற்றார். ஆனால் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே நீல் சிலை அகற்றப்பட்டது.

🌻🌻1926: மதுரைக்கு வருகைபுரிந்த சைமன் குழுவை எதிர்த்தார். வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டார். 2 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார்.

🌻🌻1936: காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி தலைவரானார். யுத்த நிதிக்குப் பணம் தரவேண்டாம் என்று மக்களிடையே பிரச்சாரம் செய்த்தால் அந்நிய அரசால் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறைக்கு அனுப்பட்டார்.

🌻🌻1941 மே – 31: சிறையிலிரிந்த காமராஜர் விருதுநகர் நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

🌻🌻1942-45:
ஆகஸ்டு புரட்சியின் காரணமாக சிறைவாசம் அனுபவித்தார்.

🌻🌻1946 மே 16: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்தலில் வெற்றிப்பெற்றார்.

🌻🌻1949-1953: இலங்கைக்குச் சுற்றுப்பயணம் சென்றார்.

🌻🌻1954 பிப்ரவரி: மலாய் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலமைச்சர் இராஜாஜி ராஜினாமா செய்தார். நிலைமையை சமாளிக்க சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்குக் காமராஜர் போட்டியிட்டு வென்றார்.

🌻🌻1954 ஏப்ரல் – 13: தமிழக முதலமைச்சரானார். இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் போட்டிட்டு வென்றார்.

🌻🌻 1963 வரை முதலமைச்சராக இருந்தார்.

🌻🌻1961: சென்னையில் மாநகராட்சி உருவாக்கிய காமராஜர் சிலையை நேரு திறந்து வைத்தார்.

🌻🌻1963 அக்டோபர் – 2: காமராஜர் திட்டத்தின் படி (K Plan) பதவியை ராஜினாமா செய்தார்.

🌻🌻1964 – 67: அனைத்திந்திய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார்.

🌻🌻1964 மே – 27: பிரதமர் நேரு மறைந்தார். சாஸ்திரியை பிரதமராக்கினார் காமராஜர்.

🌻🌻1966 : பிரதமர் சாஸ்திரி மறைந்தபோது இந்திரா காந்தி பிரதமர் ஆவதற்குத் துணை செய்தார்.

🌻🌻1966 ஜுலை 22: சோவியத் நாட்டில் இருபது நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

🌻🌻1967: பொதுத் தேர்தலில் காமராஜர் தோல்வியுற்றார். சி.என். அண்ணாதுரை முதல்வரானார்.

🌻🌻1969: நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

🌻🌻1975 அக்டோபர் – 2: காமராஜர் மறைந்தார்.

🌻🌻1976: மத்திய அரசு காமராஜர் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டது. ‘பாரத ரத்னா விருது வழங்கியது.

🌻🌻1977: தமிழ்நாடு சட்டப்பேரவையில் காமராஜர் படம் குடுயரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியால் திறந்துவைக்கப்பட்டது

🌻🌻1978: சென்னை தியாகராய தகரில் காமராஜர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக்கியது தமிழக அரசு. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டது.

🌻🌻1984 ஜீலை – 15: விருதுநகரைத் தலைமை இடமாகக் கொண்டு காமராஜர் மாவட்டம் உருவாகியது

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

செவ்வாய், 14 ஜூலை, 2015

பி.எப்.. கணக்கு விவரம் தமிழில் அறிய வழி.

💚💚💚💚💚💚💚💚💚

பி.எப்., கணக்கு விவரங்கள் இனி தமிழிலும் அறியலாம்!

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
தொழிலாளர் சேமநல நிதியான, பி.எப்., சந்தாதாரர்கள், தங்களின் கணக்கு இருப்பு மற்றும் பிற தகவல்களை, தமிழில், எஸ்.எம்.எஸ்., மூலம் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தாம்பரம் பி.எப்., மண்டல
அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பி.எப்., சந்தாதாரர்களுக்கு, ஒருங்கிணைந்த நிரந்தர அடையாள எண் வழங்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணை பயன்படுத்தி, 'ஆன் - லைன்' மூலம், பி.எப்., கணக்கு விவரங்கள் மற்றும் பிற வசதிகளை பெற முடியும். சந்தாதாரர்கள், EPFOHO UAN TAM என, குறிப்பிட்டு, 77382 99899 என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், அவர்களின் பி.எப்., கணக்கு பற்றிய தகவல்கள், தமிழில், எஸ்.எம்.எஸ்., ஆக வரும். செயலற்ற கணக்குகளை முடிவுக்கு கொண்டு வரவும், பழைய கணக்கில் உள்ள தொகையை, புதிய கணக்கிற்கு மாற்றவும், உதவி மையம் திறக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டு பணிக்கு செல்வோருக்கு, மையப்படுத்திய உறுப்பினர் சான்று வழங்கப்படும்.
'ஆன் - லைன்' மூலம், சந்தாதாரர் கணக்குகளை மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். உறுப்பினர் கணக்குகள், 'ஆன் - லைனில்' பதிவேற்றம் செய்யப்படுகிறது; 2014 - 15ல், 14.5 கோடி உறுப்பினர் கணக்குகள், பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. இதேபோல், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தையும், 'ஆன் - லைன்' மூலம் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

♻♻♻♻♻♻♻♻♻

வியாழன், 9 ஜூலை, 2015

IMPORTANT DATES

Important Dates To Remember
************************************************************
January 01 : Global family day.
January 09 : NRI Day.
January 10 : World laughter day.
January 12 : National Youth Day.
January 15 :Army Day.
January 23: Netaji Subhash Chandra bose birthday
January 26 : India's Republic Day
January 26 : International Customs day.
January 28 : Lala lajpat rai birthday
January 28 : Data protection day
January 30 : Martyrs' Day
January 30 : World leprosy eradication day
February 04 : World Cancer day
February 06 : International day against female genital mutilation
February 12 : Darwin day
February 12 : World day of the sick.
February 13 : Sarojini Naydu's birthday
February 14 : Valentine’s day
February 20 : World day of social justice
February 21 : International mother language day
February 22 : World scout day
February 23 : World peace and understanding day
February 24 : Central Excise Day.
February 28 : National Science Day.
Also check out: list of All Countries, their Capital and Currency
March 4 : World day of fight against sexual exploitation, National Security day.
March 8 : International Women's Day
March 13 : World kidney day
March 15 :World Disabled Day
March 15 : World consumer right day.
March 20 : World day of theatre for children and young people.
March 20 : International day for Francophonie
March 20 : World Sleep day
March 21 : World Forestry Day.
March 21 :International Day for the Elimination of Racial Discrimination.
March 22 : World water day
March 23 :World Meteorological Day.
March 24 : World T.B. day
March 24 : International day for achievers
March 25 : International day of remembrance-victims of slavery and transatlantic slave trade
March 27 : World Drama day
April 2 : World autism day
April 5 : National Maritime Day.
April 7 :World Health Day.
April 17 : World haemophilia day
April 18 :World Heritage Day.
April 22 :Earth Day.
April 23 : World book and copyright day
April 25 : World Malaria day
April 29 : International Dance day
May 1 : International Labour Day (Workers Day)
May 3 :Press Freedom Day.
May 4 : Coal miner’s day
May (2nd Sunday) : Mother's Day
May 8 :World Red Cross Day.
May 9 : Victory day
May 11 : National Technology Day.
May 12 : International Nurses day
May 14 : World Migratory day
May 15 : International Day of the Family.
May 17 :World Telecommunication Day (Information society day)
May 21 : Anti-terrorism day
May 24 :Commonwealth Day.
May 31 :Anti-Tobacco Day.
June 4 :International Day of Innocent Children Victims of Aggression.
June 5 : World Environment Day.
June 7 : International level crossing awareness day
June 8 : World ocean day
June 12 : World day against child labour
June(2nd Sunday) : Father’s Day.
June 14 : World blood donor day
June 17 : World day to combat desertification and drought
June 20 : World Refugee day.
June 21 : Father's day, World Music day.
June 23 : United Nation’s public service day
June 23 : International Widow’s day
June 26 : International day against Drug abuse & Illicit Trafficking.
June 27 : World Diabetes Day.
July 1 : National Doctor’s day.
July 6 :World Zoonosis Day.
July 11 : World Population Day.
July 12 : World Malala day
July 18 : Nelson Mendela International day
July 28 : World Nature conservation day
August 2 : International Friendship Day.
August 3 : Independence day of Niger
August 5 : Independence day of upper volta
August 6 :Hiroshima Day
August 9 : International day of World’s indigenous people
August 9 :Quit India Day and Nagasaki Day.
August 12 : International Youth day
August 15 : Independence Day of India
August 23 : International day for the remembrance of the slave trade and its abolition
August 29 : National Sports Day.
September 5 : Teachers' Day (Dr. Radhakrishnan’s birthday)
September 5 : Forgiveness day
September 8 :World Literacy Day.
September 14 : Hindi day, World first aid day
September 16 :World Ozone Day. Engineer's day in India
September 21 :Alzheimer's Day, International day of peace
September 25 : Soc cial justice day
September 26 : Day of the Deaf.
September 27 : World Tourism Day.
October 1 : International day of the Older person
October 2 : Mahatma Gandhi birthday, International day of non-violence
October 3 :World Habitat Day, World nature day
October 4 :World Animal Welfare Day.
October 5 : World Teacher’s day.
October 8 : Indian Air Force Day.
October 9 : World Post Office day.
October 10 : National Post Day.
October 11 : International girl child day
October 12 : World Arthritis day.
October 13 :UN International Day for National disaster reduction.
October 14 :World Standards Day.
October 15 : World White Cane Day( guiding the Blind)
October 16 : World Food Day.
October 17 : International day for the eradication of poverty.
October 20 : World statistics day
October 24 : UN Day, World development information Day.
October 30 :World Thrift Day.
November 1 : World vegan day
November 5 : World Radiography day.
November 9 : World services day
November 14 : Children's Day in India, Jawaharlal Nehru birthday
November 16 : International day for Endurance
November 17 : World Student day, National Journalism day
November 18 : World Adult day.
November 19 : World Citizen day.
November 20 : Africa Industrialization Day, Universal children day.
November 21 : World Television day, World Fisheries day.
November 25 : World Non-veg day.
November 26 : Law day
November 29 : International Day of Solidarity with Palestinian People.
November 30 : Flag day.
December 1 : World Aids Day.
December 2 : World Computer literacy day, International day of abolition of slavery
December 3 : International day of People with disabilities, World conservation day
December 4 : Navy Day.
December 5 : International volunteer day for economic and social development.
December 7 :Armed Forces Flag Day, International civil aviation day.
December 9 : The International day against corruption.
December 10 :Human Right Day.
December 11 : International Mountain day.
December 14 : International Energy day.
December 18 : International Migrants day.
December 19 : Goa’s liberation day.
December 20 : International Human solidarity.
December 23 :Kisan Divas Farmer's Day).
December 29 : International Bio-diversity day

PRIOR INTIMATION to APPLY PASSPORT GO

FLASH NEWS:
>G.O-71-dt-2.7.15-P&A-Department-Submit prior intimation to apply passport
for grant/renewal order issued-g.o avail in

செவ்வாய், 7 ஜூலை, 2015

நல்வாழ்விற்கான நற்சிந்தனைகள்

💝இனிய வாழ்விற்கு வழிகொடுக்கும் சில சிந்தனைகள்:

✨தண்ணீர் நிறைய குடியுங்கள்.
✨காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
✨ இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
✨உடற்பயிற்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
✨தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
✨ நிறைய புத்தகம் படியுங்கள்.
✨ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
✨குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
✨குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
✨உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
✨எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
✨உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
✨ மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
✨நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கனவு காணுங்கள்.
✨அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரயம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
✨கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
✨ வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
✨எப்பொழுதும் மகிழச்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
✨வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
✨ முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
✨வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
✨ மன்னிக்கப் பழகுங்கள்.
✨ 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
✨அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
✨உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
✨ உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
✨ ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
✨உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
✨உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
✨ எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.🐬

திங்கள், 6 ஜூலை, 2015

பல்வகை விடுப்பு மற்றும் அதன் விவரங்கள்

🍒🌷🍇🍒🌷🍇🍒🌷🍇🍒🌷
தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்!
🍇🌷🍒🍇🌷🍒🍇🌷🍒🍇🌷

1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays)
💢💢💢💢💢💢💢💢💢💢💢
பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.

2. மதச்சார்பு விடுப்பு (Religious / Restricted Holidays
💢💢💢💢💢💢💢💢💢💢💢
வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.

3. தற்செயல் விடுப்பு ( Casual Leave)
💢💢💢💢💢💢💢💢💢💢💢
ஒரு காலண்டர் ஆண்டில் 12 நாட்கள் எடுக்கலாம். எல்லாவகை பணியாளர்களுக்கும் உண்டு. விடுப்பு எடுத்த பின்னரும் விண்ணப்பம் கொடுக்கலாம். முன்கூட்டி விண்ணப்பித்தால் குறிப்பாக காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை.

4. ஈட்டிய விடுப்பு (Earned Leave)
💢💢💢💢💢💢💢💢💢💢💢
ஒரு பணியாளர் பணி செய்த ஒவ்வொரு 12 நாடகளுக்கு ஒரு நாள் என்ற கணக்கில் அவருக்கு விடுப்பு கிடைக்கும். பணி செய்ததால் கிடைப்பதால் ஈட்டிய விடுப்பு எனப்படுகிறது. 6 மாதத்திற்கு ஒரு முறை 15 என்ற எண்ணிக்கையில் ஒருவரது கணக்கில் வரவு வைக்கப்படும். தகுதி காண் பருவத்தினருக்கு இதில் பாதி நாட்கள் மட்டுமே கிடைக்கும். ஈட்டிய விடுப்பை பணியாளர்கள் துய்க்கலாம், அல்லது சரண்டர் செய்து பணமாகப் பெறலாம்., அல்லது 240 நாட்கள் வரை சேமித்து வைத்து பணி ஓய்வின் போது பணமாகப் பெறலாம்.

5. மருத்துவ விடுப்பு (Medical Leave)
💢💢💢💢💢💢💢💢💢💢💢
மருத்துவ சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு என்றும் அழைப்பர். 60 நாட்கள் வரை விடுப்பு எடுக்க மருத்துவ சான்று இணைக்கவேண்டும். அதற்கு மேல் விடுப்பு எடுத்தால் அலுவலகத் தலைவர் மருத்துவ குழுவின் ஆய்வுக்கு அனுப்புவார். பணி புரிந்த ஆண்டுகளுக்கு ஏற்ப விடுப்பு எடுக்க.   L தகுதியான நாட்கள் மாறுபடும். இரண்டாண்டு பணி முடித்தவர் 90 நாட்கள் எடுக்கலாம். 20 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தால் 540 நாட்கள் வரை எடுக்க தகுதி உண்டு.

6. சொந்த காரணங்கள் பேரிலான ஈட்டா விடுப்பு (Unearned Leave on Private Affairs)
💢💢💢💢💢💢💢💢💢💢💢
சொந்த காரங்களுக்காக எடுப்பது. சான்று தேவையில்லை. பணிக்காலம் 10 ஆண்டுக்குள் இருந்தால் 90 நாட்கள். பணிக்காலம் 10 ஆண்டுக்கு மேல் இருந்தால் 180 நாட்கள் தகுதியானவை ஆகும். தகுதி காண் பருவத்தினருக்கு கிடையாது.

7. மகப்பேறு விடுப்பு (Meternity Leave)
💢💢💢💢💢💢💢💢💢💢💢
திருமணமான பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் 6 மாதம் விடுப்பு கிடைக்கும். உயிருடன் உள்ள இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும். தகுதி காண் பருவத்தினருக்கும் உண்டு.

8. சிறப்பு தற்செயல் விடுப்பு (Special Casual Leave)
💢💢💢💢💢💢💢💢💢💢💢
குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதல், மாநில/ தேசிய / சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளுதல் காரணங்களுக்காக வழங்கப்படும்.

9. மாற்றுப்பணி ஈடுசெய் விடுப்பு (Turn Duty, Compensate Leave)
💢💢💢💢💢💢💢💢💢💢💢
அலுவலகங்களில் விடுமுறை நாட்களில் சுழற்சி முறையில் பணிசெய்வர். இதற்கு ஈடாக வேறு ஒரு நாளில் விடுப்பு எடுக்கலாம். 6 மாதத்துக்குள் எடுக்க வேண்டும்.

10. இடமாறுதல் - பணி ஏற்பு இடைக்காலம்
(Transfer - Joining Time)
💢💢💢💢💢💢💢💢💢💢💢
இடமாறுதலில் செல்லும் ஒருவருக்கு புதிய பணி இடம் 8 கி.மீ. தூரத்திற்கும் அதிகம் இருந்தால் 6 நாட்கள் தயாரிப்பு நாட்கள் + ஒவ்வொரு 160 கி.மீ. தூரம் வரை ஒரு நாள் பயண நாள் சம்பளத்துடன் துய்க்கலாம். இந்த தகுதியான நாட்களுக்குள் பணியில் சேர்ந்துவிட்டால் துய்க்காத நாட்களை அவரது ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்

🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀

சனி, 4 ஜூலை, 2015

குறள் நெறி கதை

சார் நம்ம நிறுவனத்து தயாரிப்புகளை கிண்டல் அடித்து நமக்கு மார்க்கெட் போட்டியான ஒரு நிறுவனம் விளம்பரம் எடுத்து இருக்காங்க.
ஓ.. அப்படியா அதுக்கு என்னா செய்யலாங்கறிங்க!
நாமும் பதிலுக்கு ஒரு விளம்பரம் எடுத்து அதுக்கு கவுன்ட்டர் கொடுக்கணும் சார்..
சரி அவங்க நம்ம தயாரிப்பு பத்தி கிண்டல் பண்ணதுல ஏதும் உண்மையிருக்கா?
95 சதவீதம் இல்ல சார்..
ஓ.. அப்ப 5சதவீதம் இருக்கு இல்லியா.. அந்த நிறுவனம் நமக்கு நல்லதை தான் செஞ்சிருக்காங்க.. அவங்க செலவு பண்ணி நம்ம குறையை சுட்டிக்காமிச்சு இருக்காங்க.. அவங்களுக்கு பதிலடி தர்றதுக்கு யோசிக்கிற நேரத்துல இந்தக் குறையை களையெடுக்க யோசியுங்க, அதுவே நமக்குப் போதும்.
அந்த முதலாளியின் இந்த பாசிட்டிவான பழி வாங்கும் குணமில்லாத அணுகுமுறை அடுத்த சில மாதங்களில் அவர்களது விற்பனையை பல மடங்காக்கியது.
நீதி: செல்வத்தை உயரிய வழியில் சேர்த்துக் கொண்டே இருப்பது தான் எதிரியின் கர்வத்தை அறுக்கும் கூரிய ஆயுதமாகும்.

செய்க பொருளைச் செறுநர் செறுக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அட்லஸ் வழங்குவதில் சிக்கல்

🎯🎀🎯🎀🎯🎀🎯🎀🎯

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அட்லஸ் வழங்குவதில் சிக்கல்

🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓
மத்திய அரசு அனுமதி கிடைக்காததால், தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு இலவச, 'அட்லஸ்' புத்தகம் வழங்குவதில், இரண்டாவது ஆண்டாக சிக்கல் நீடிக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும், 15 லட்சம் மாணவர்களுக்கு, அட்லஸ் என்ற, உலக வரைபட புத்தகம், அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும். ஆனால், கடந்த கல்வியாண்டு முதல், அரசு சார்பில், அட்லஸ் புத்தகம் வழங்குவதை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் கழகம் நிறுத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:அட்லஸ் வரைபடப் புத்தகம் அச்சடிக்க, மத்திய அரசின், 'சர்வே ஆப் இந்தியா' அமைப்பின் அனுமதி வேண்டும். அதிகாரபூர்வ வரைபடத்தை, அந்த அமைப்பில் பெற்ற பின்னரே, அச்சடித்து வழங்க முடியும்.கடந்த ஆண்டு, ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டு, தெலுங்கானா உருவாக்கப்பட்டதால், வரைபடத்தில் திருத்தம் உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்தது.

அதேபோல், சீன எல்லைப் பகுதியிலுள்ள சில இடங்கள் குறித்தும், தெளிவான படங்கள் உருவாக்கப்படுவதால், புதிய வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் படங்களையும், திருத்தப்பட்ட மாநில வரைபடங்களையும் அதிகாரபூர்வமாக வழங்கி, அனுமதி அளித்தால் தான், புதிய புத்தகம் தயாரிக்க முடியும். எனவே, அனுமதிக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

வெள்ளி, 3 ஜூலை, 2015

DIRECTORATE of ELEMENTARY EDUCATION office address.

Directorate of Elementary Education DPI Complex College Road, Chennai-600006 (PBX Nos. 28253684 & 28253709) 

Website:http://www.tn.gov.in/schooleducation/

Designation Name Direct Residence

Director

Thiru   R.Elangovan

28271169, PABX:122

JD (Admin)

Tmt   N Latha

28216638

JD (Aided School Scheme)

Thiru   C.Selvaraj

28202414, PABX: 126

FAX

044-28217583

7th CENTRAL PAY COMMISSION EXPECTED SALARY

7th Central Pay Commission ல் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.

   மத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (Expected DA என நம்மவர்கள் அனுப்பும் தகவல்கள் மத்திய அரசு ஊழியர்களின் இணையங்களின் தகவல்கள் மூலமே அனுப்பப்படுகின்றன) இவர்களின் கணக்கீடுகள் பெரும்பாலும் நம்பகத்தன்மை உடையதாகவே உள்ளது. 7th CPC ல் ஊதியம் நிர்ணயம் செய்ய எதிர்பார்க்கப்படும் முறை பற்றி அவர்களின் இணையதளத்தில் உள்ளது  கீழே குறிப்பிடப்பட்டுள்ளது

"7th CPC Pay in Pay Band = [(6th CPC Pay in Pay Band as on 01.01.2016+6th CPC Grade Pay)X 2.20]-6th CPC Grade Pay".

அதாவது 7th CPC ஊதியம் என்பது, 1.1.2016 அன்று உள்ள ஆறாவது ஊதியகுழு  ஊதியம் + ஆறாவது ஊதியகுழு தர ஊதியம் x 2.20. அதன் பின்னர் ஆறாவது ஊதியகுழு தர ஊதியத்தை கழித்தால் கிடைப்பது ஆகும்.

   உதாரணமாக ஆறாவது ஊதிய குழுவின் 5200+2800 ல் இருப்போரை வைத்து கணக்கிட்டு பார்த்தால் 5200 + 2800 =8000 x 2.20 =17600 - GP2800 = 14800 என வரும். இது அடிப்படை ஊதியம் எனும் Entry Level Pay கணக்கிடுவதற்குரியது. இத்துடன் புதிய GP 8800 சேர்த்தால் 23600 வரும். அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலிலும் இவ்வாறே அனைத்து தரப்பினருக்கும் கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும்.இத்தகவல்கள் காணப்படும் பகுதிகள் கீழே இணைப்புகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015 ஜூன் மாதம் இது போன்ற இணையங்களில் Multiplication factor 3.7 என்றும் ஊதியம் 4.5 மடங்கு கூடுதலாக இருக்கும் என்றும் தகவல்கள் உள்ளன. இருப்பினும் ஆறாவது ஊதியகுழு 1.86 முறையை விளக்கி அதை பின்பற்றி 2.20 வரலாம் என விளக்கியுள்ள 2.20 Multiplication factor முறை உங்கள் முன் விளக்கி கூறப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள Link ல் சென்று பார்க்கவும்.

7th Pay Commission Pay and Allowances Estimation - GConnect Calculator - http://www.gconnect.in/orders-in-brief/7thcpc/7th-pay-commission-pay-allowances-estimation-gconnect-calculator.html

வியாழன், 2 ஜூலை, 2015

JULY DIARY

🔵🔷🔵🔷🔵🔷🔵🔷

🍀🌺JULY diary🍀🌺

🌻4 Grievance day

🌻11 Primary CRC

🌻14 RL

🌻15 Kalvi valarchi naal

🌻18 Govt leave

🌻25 Upper primary CRC

🍇🍇🍇🍇🍇🍇🍇

புதன், 1 ஜூலை, 2015

GPF சந்தாதாரர்கள் தங்கள் GPF கணக்கில் தங்களது மொபைல் எண்ணை பதிவு செய்யும் வசதியை மாநில கணக்காயர் அலுவலகம் அறிமுகப்படுத்தயுள்ளது .

GPF சந்தாதாரர்கள் தங்கள் GPF கணக்கில் தங்களது மொபைல் எண்ணை பதிவு செய்யும் வசதியை மாநில கணக்காயர் அலுவலகம் அறிமுகப்படுத்தயுள்ளது .


 எனவே GPF சந்தாதார்கள்


என்ற இணைப்பை CLICK செய்து தங்களது CELL NUMBER ஐ பதிவு செய்யவும் .

G.O Ms.No.183 - Contributory Pension Scheme (CPS) - வட்டிவிகிதம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

G.O Ms.No.183 - Contributory Pension Scheme (CPS) - வட்டிவிகிதம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து அரசு பள்ளிகளிலும் தினமும் 15 நிமிடங்கள் கட்டாயம் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும்' என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து அரசு பள்ளிகளிலும் தினமும் 15 நிமிடங்கள் கட்டாயம் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும்' என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் 2014 முதல் யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பல பள்ளிகளில்

நடத்தப்படுவதில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன.இதையடுத்து யோகா மற்றும் தியான பயிற்சியை தினமும் கட்டாயம் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு: கடந்த 2014 அக்டோபரில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி பள்ளிகளில் மதிய உணவு இடைவேளைக்கு 30 நிமிடங்கள் முன் யோகா பயிற்சியை தினமும் கடைபிடிக்க வேண்டும்; இந்த பயிற்சியை உடற்கல்வி ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 நிமிடம் யோகா; 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை 15 நிமிடம் யோகா; 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 15 நிமிடங்கள் யோகா ஐந்து நிமிடங்கள் தியானம் பயிற்சி அளிக்க வேண்டும்.தியான பயிற்சியை காலையில் வகுப்பறையில் நடக்கும் இறை வழிபாட்டில் நடத்த வேண்டும்.

உயிர் எழுத்துகள் (தனி எழுத்துகளாக)

கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும். Click to download