🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
NMMS தேர்வு விண்ணப்ப அறிவிப்பு
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🎓 தற்போது எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம்
🎓SC / ST மாணவர்கள் 7ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களும், மற்ற மாணவர்கள் 55% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்
🎓 30.11. 2015 to 11. 12. 2015க்குள் மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்
🎓15. 12. 2015க்குள் தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
🎓7. 12. 2015 to 19.12. 2015க்குள் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்
🎓 விண்ணப்பக் கட்டணம் ரூ.50
🎓 இணையதள முகவரி www.tndge.in
ஞாயிறு, 29 நவம்பர், 2015
NMMS exam announced:
ஞாயிறு, 8 நவம்பர், 2015
முழுமையான நம்பிக்கை
கடுமையான வறட்சியால் துன்பப்பட்ட கிராம மக்கள் ’முல்லா அவர்களிடம் சென்று மழைக்காக பிரார்த்தனை செய்ய சொல்வோம்’ என முடிவெடுத்து அவரிடம் சென்று மழைக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.
அவர்களின் கோரிக்கையை கேட்ட முல்லா கோபமாக “ என் பிரார்த்தனை மீது நம்பிக்கை இல்லாதவர்கள் வைக்கும் கோரிக்கையை ஏற்று நான் பிரார்த்தனை செய்யமாட்டேன்” என்று பதிலளித்தார்.
அதிர்ந்துபோன மக்கள், முல்லா அவர்களே உங்கள் பிரார்த்தனை மீது நம்பிக்கை வைத்துதானே இவ்வளவு தூரம் வந்து உங்களிடம் பிரார்த்தனை செய்யுமாறு கோரிக்கை வைக்கிறோம். அப்படி இருக்க உங்கள் பிரார்த்தனையில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று வீணாக பழிசுமத்துகிறீர்களே இது என்ன நியாயம்” என்றனர் கிராம மக்கள்.
“ நீங்கள் பொய் சொல்கிறீர்கள் ! உண்மையிலேயே என் பிரார்த்தனை மீது நம்பிக்கை உள்ளவர்களானால் நீங்கள் வரும் போது குடையுடன் அல்லவா வந்திருக்க வேண்டும் ? “ என்றார் கூலாக முல்லா.
தெரிந்த பெயர் தெரியாத விபரம் !
ஜெராக்ஸ்:
இந்த வார்த்தையை கேள்விப்படாதவர்கள் இக்காலத்தில் இருப்பது அபூர்வம் ! புகைப்பட நகல் (Photo copy) என்ற அர்த்ததில் தான் இந்த வார்த்தை உபயோகப்படுத்தப்படுகிறது ! ஆனால் உண்மையில் அது புகைப்பட நகல் (Photo copy) மிஷின் தயாரிக்கும் கம்பெனியின் பெயர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ? என்வே இம்முறை, ஜெராக்ஸ், ஸாரி ! புகைபட நகல் எடுக்க செல்லும் போது ஜெராக்ஸ் என்று கூறாமல் Photo copy என்றே கூறுங்கள் !
கான்வெண்ட் என்பது கன்னியாஸ்திரீகள் வசிக்கும் இடம்:
பல ஆங்கில பள்ளிப்பெயர்கள் ’……………கான்வெண்ட்’ என்று பெயரிடப்பட்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள் ! ’கான்வெண்ட்’ என்ற சொல்லுக்கு கன்னியா ஸ்த்ரீகள் வசிக்கும் இடம் என்பது பொருளாகும். பெரும்பாலான ஆங்கில கல்விகூடங்கள் அவர்களால், அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே நடத்தப்பட்டதால் அப்பெயர் வழக்கத்தில் இருக்கிறது. ஆனால், சாதாரண பிரஜைகளால் நடத்தப்படும் ஆங்கிலப்பள்ளிக்கும் அப்பெயரை இட்டு தங்கள் ’ஆங்கில அறிவை ‘ பறைசாற்றிக் கொள்பவர்கள் பற்றி என்ன சொல்ல !?

கணித வித்தை
தோ ஒரு கணித வித்தை ! இதை எப்படி செய்ய முடிகிறது என்பதை உங்களால் விளக்க இயலுமா ?
இதை உங்கள் நண்பர்கள் கூட்டத்தில் செய்து மகிழலாம்.
உங்கள் நண்பர்கள் யாரேனும் ஒருவரை ஒரு துண்டு காகிதத்தை எடுத்து மூன்று இலக்க எண்ணை எழுதச்சொல்லுங்கள். அந்த எண் எவ்வகையிலும் இருக்கலாம். அதாவது பூஜ்யங்கள் போன்றவற்றுடன் இருக்கலாம். அந்த எண்ணை உங்களிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
அதை அப்படியே அடுத்த நபருக்கு கொடுக்க சொல்லி அவரை அந்த மூன்று இலக்கத்து அருகில் அதே மூன்று இலக்க எண்களை எழுதச்சொல்லவும். அது இப்போது ஆறு இலக்க எண்ணாக இருக்கும்.
அதாவது உதரணத்திற்கு முதல் நபர் எழுதியது 308 என்றால் 308308
அந்த ஆறு இலக்க எண்ணை ஏழால் வகுக்க சொல்லுங்கள். ஏழால் வகுபடும் எண்கள் மிகக்குறைவு இந்த எண் ஏழால் மீதமின்றி வகுபடுமா என்ற சந்தேகம் வேண்டாம்! அந்த எண்கள் கண்டிப்பாக ஏழால் மீதமின்றி வகுபடும்.
வகுத்ததால் வந்த ஈவை மட்டும் வேறொரு காகிதத்தில் எழுதி வேறு யாருக்கும் தெரியாமல் மற்றொரு நபருக்கு கொடுக்கச்சொல்லவும்.
அந்த நபரை கொடுத்த அந்த எண்களை பதினொன்றால் வகுக்கச்சொல்லுங்கள். (மீதியில்லாமல் வரும்!)
வரும் விடையை வேறொரு காகிதத்தில் எழுதி மடித்து மற்றொரு நபரிடம் கொடுக்கச்சொல்லுங்கள் ! அவரை அவ்வெண்ணகளை பதிமூன்றால் வகுக்க்ச்சொல்லுங்கள் !(கவலைப்படாதீர்கள் இதுவும் மீதிமில்லாமல் வகுபடும் !)
வரும் விடையை வேறொரு காகிதத்தில் எழுதி மடித்ததை நீங்கள் வாங்கி முதன்முதலில் மூன்று இலக்கம் எழுதினாரே அவரிடம் கொடுங்கள் !
அவர் முதலில் எந்த மூன்று இலக்க எண்களை எழுதினாரோ அந்த எண்கள் அவர் கைகளில் இருக்கும் !?
இது நிகழ்ந்தது எப்படி ?
மாதிரி:
- மூன்று இலக்க எண்: 234
- ஆறு இலக்கமாக: 234234
- அதை 7 ஆல் வகுக்க: 234234 /7 =
- அதன் ஈவு: 33462
- அதை 11 ஆல் வகுக்க: 33462 / 11
- வரும் ஈவு : 3042
- அதை 13 ஆல் வகுக்க 3042 / 13
- வரும் ஈவு: 234 ! ஆரம்பத்தில் எழுதிய மூன்றிலக்க எண் !
ஞாயிறு, 1 நவம்பர், 2015
மூங்கில் இயற்கை கொடுத்த வரம்
மூங்கில் மரங்கள் அதிகமான
சுவாசக்காற்றைத்தருகின்றன....
ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்
ளனர்.
ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு
தேவைப்படுவது 800 கிராம் எனக்
கணக்கிட்டுள்ளது.
ஒரு மூங்கில் குத்து ஓர் ஆண்டில் 309 கிலோ உயிர்க் காற்றைத் தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம் ஆக்சிஜனை வெளியிடுகிறது அதனால் மூங்கில் மரம்
வளர்த்தால் அதிகமான ஆக்ஸிஜனைப் பெறலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உயிர் எழுத்துகள் (தனி எழுத்துகளாக)
கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும். Click to download
-
Directorate of Elementary Education DPI Complex College Road, Chennai-600006 (PBX Nos. 28253684 & 28253709) Website: http://www.tn.gov...
-
மூங்கில் மரங்கள் அதிகமான சுவாசக்காற்றைத்தருகின்றன.... ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுகிற...